அமைச்சர் கே.தங்கமணி அறிவிப்பு
சென்னை, மார்ச் 13 - விவசாயிகளுக்கு 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் மின்துறை அமைச்சர் கே.தங்க மணி கூறினார். தமிழக சட்டப்பேரவையில் தமது துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு வெள்ளியன்று (மார்ச் 13) பதிலளித்து வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: தட்கல் முறையில் பணம் காட்டி காத்திருக்கும் விவசாயிகளுக்கு 25 ஆயிரம் இணைப்புகளும், சாதாரண வரிசையில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் 25 ஆயிரம் இணைப்புகளும் வழங்கப்படும். 50 மெகாவட் மின்திறன் கொண்ட சூரிய மேற்கூரை 250 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். அனைத்து மத்திய மாநில அரசு அலுவலகங்களிலும் பிரிப்பெய்டு மின்னளவிகள் (மீட்டர்) 390 கோடி ரூபாய் செலவில் பொருத்தப்படும். மின் நுகர்வோரிடம் “மின்னணு முறையில் பணம் செலுத்தினால் வீட்டு வாசலி லேயே வசூல்” திட்டம் அறிமுகப்ப டுத்தப்படும். குறைதீர்க்கும் உதவி எண் 1912க்கு வரும் புகார்கள், அதற்மீதான நடவடிக்கை குறித்த விவரங்கள் நுகர் வோருக்கு குறுந்தகவலாக அனுப் பப்படும்.
கேங்மேன்
கேங்மேன் பணிக்கான உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இம்மாத இறுதியில் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அனு மதிக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் பணி யிடத்தை, 10ஆயிரமாக உயர்த்தப்படும். 35 கோடி ரூபாய் செலவில் கீழ்மேட்டூர் தடுப்பணை புனல் மின் நிலையம்-4ன் 18 தடுப்பணை கதவுகளையும் செப்பணிடும் மற்றும் மாற்றப்படும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.